உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..! களத்தில் மதிமுகம்..!!
வேலூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டமானது மேயர் சுஜாதா தலைமையில் நடந்தது. இதில் துணை மேயர் சுனில், ஆணையர் ஜானகி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பாமக மாமன்ற உறுப்பினர் பாபி கதிரவன் என்பவர் தனக்கு பேச வாய்ப்பு அளிக்கவில்லை என கூறி தன் வார்டு புறக்கணிக்கபடுவதாக கூறி வெளிநடப்பு செய்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக திருப்பூர் மாவட்டம் , அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால், மழை நீர் வடிகால் மற்றும் நீர் வழிப்பாதைகளை கண்காணித்து சுத்தப்படுத்துதல் மற்றும் தூர் வாருதல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேலியம் பேடு ஊராட்சியில் தற்போது நடவு செய்யப்பட்டு நெற்பயிர் வளர்ந்துள்ள நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்ததாழ்வு மண்டலத்தின் காரணமாக மிககனமழை பெய்தது. இதனால் ஆறுகள், ஏரிகள், குளம், குட்டை என அனைத்தும் நிரம்பி வழிந்து, பயிரிட்டுள்ள விளைநிலங்கள் மூழ்கியுள்ளது. இப்பகுதி விவசாயிகள் உடனடியாக ஊரகவளர்ச்சிதுறை, விவசாயத்துறை, மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து தக்கநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதிகளில் கொட்டாறு மற்றும் கானாற்றில் புதர்களும் மண்டி உள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து லால்மஜித் தெரு, சின்னமஜித் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த குப்பைகளை ஆட்சியர் உடனடியாக அகற்ற வேண்டும் இல்லை என்றால் பேர்ணாம்பட்டு நகராட்சிக்கு அபராதம் விதிக்கபடும் என எச்சரிக்கை விடுத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா மற்றும் சோளிங்கரில் அதிமுக கட்சியின் 53-ஆவது தொடக்க விழாவை முன்னிட்டு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சுகுமார் தலைமையில் அதிமுக மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மாலைகளை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானத்தை வழங்கி விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதே போல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜீ சம்பத் கலந்து கொண்டு எம் ஜி ஆர் சிலைக்கும், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..