உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்.!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் போதை பொருட்கள் விற்பனை அதிகமாகி வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில் காவல் நிலைய ஆய்வாளர் விநாயகமூர்த்தி தீவிர விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரை சேர்ந்த தேவாரம்,பரத் ஆகிய இருவரும் பெங்களூரிலிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை எடுத்து வந்து மளிகை கடை நடத்தி வரும் நடராஜன் என்பவரிடம் கொடுப்பதும் அவர் விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட 165 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி மூவரையும் சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளக்காட்டுப் புதூர் பகுதியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில் அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்கள் பதிக்கி வைக்க பட்டிருப்பதாக தகவல் வந்ததை அடுத்து தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது ஒரு வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 கிலோ ஹான்ஸ் புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் மேலும் விற்பனையில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சேட்டு சிங் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லப்பா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதிக்கு உட்பட்ட 7 கிராமங்களில் முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மூன்று சாலை பணிகளுக்கு 8 கோடியே 71 லட்சம் மதிப்பிட்டில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் மேலும் சாலை பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த காரர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..