உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்..!!
வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார். இதில் ஊராட்சிமன்ற தலைவர் குணசுந்தரி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.மேலும் நூறு நாள் வேலையில் ஈடுபடும் கிராம பெண்கள் நூற்றுக்கணக்கானோர் ஏரிக்கரையில் பனைவிதையை நடவு செய்தனர்.
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த 25 வயதான பவுன்ராஜ் என்ற இளைஞர் கூகுல் மேப் பார்த்துக் கொண்டு உணவு டெலிவரி செய்ய இருசக்கர வாகனத்தில் துரைப்பாக்கம் அருகே சென்றுகொண்டு இருந்தபோது சதுப்புனில சேற்றில் விழுந்துள்ளார். உடனடியாக அந்த இளைஞர் தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் இளைஞரையும், அவரது வாகனத்தையும் மீட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விபத்துகள் மற்றும் போக்குவரத்து பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் ஆற்காடு வாலாஜா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட முக்கிய சாலைகளில் ஆட்வெல் விளம்பர நிறுவனத்தின் மூலம் புதியதாக பொருத்தபட்டுள்ள தானியங்கி சிக்னல்கள் மற்றும் மிளிரும் ஒளி விளக்குகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அட்வெல் நிறுவனத்தினர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் புறநகர்பகுதிகளான தாடிக்கொம்பு ,மறவபட்டி, உலகம்பட்டி, குளத்தூர், உண்டார்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்தனர்.மேலும் வானத்தில் தோன்றிய இரட்டை வானவில் காண்போரை வெகுவாக கவர்ந்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம், சித்தூர், காதர் பேட்டை பகுயில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் முறையாக கழிவுநீர் தூர்வாரகோரி நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்களிடம் பலமுறை பொதுமக்கள் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதியில் கழிவு நீருடன், மழை தண்ணீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கெங்காபுரம் பகுதியில் வெளிமாநிலங்களுக்கு கடத்த ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் அஜிதா பேகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த வருவாய்துறையினர் கீரின் சிட்டி பகுதியில் உள்ள மறைவான புதரில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர், மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை OMR சாலை கண்ணகி நகர் பகுதியில் தூய்மை பணியாளரான வெங்கடேசன் என்பவரின் வீட்டில் உள்ள ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த காவல்துறையினர் துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர்
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட கல்பாக்கம் ஊராட்சியில் நாகாத்தம்மன் நகர் மற்றும் நரிக்குறவர் காலனியில் வெள்ளநீர் சூழ்ந்ததால் வீடுகளில் பாம்பு மற்றும் பூச்சிகள் வருவதாக கிராம வேதனை மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது சம்பந்தமாக பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பிரம்மாஸ் வித்யாலயா பள்ளி நிர்வாகம் நடத்தும் உணவு திருவிழாவில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் உணவு தயாரித்து விற்பனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த உணவு திருவிழாவில் மாணவர்கள் வீட்டில் உணவு தயாரித்து மாணவர்களிடமும் மற்றும் ஆசிரியர்களிடமும் விற்பனை செய்து அதில் வரும் பணத்தை மாணவர்கள் மத்தியில் ஏழைகளுக்கு உதவி செய்யும் எண்ணங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த உணவுத் திருவிழாவை மாணவர்களுடன் இணைந்து நடத்தி வருகின்றன.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..