உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக களத்தில் மதிமுகம்…!!
திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நள்ளிரவு முதல் தொடர் கனமழை பெய்து வந்த நிலையில் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே திறந்தவெளி கால்வாயில் பள்ளம் உள்ளதால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறுவதற்கு முன்னால் நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வந்து அந்த பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் எஸ்ஆலங்குளம் வைகை நகர் 3வது தெரு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. கனமழை காரணமாக இந்த குடியிருப்பு பகுதிகள் முழுவதும்.தேங்கியுள்ள மழை நீரினால் மக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் மிகவும் சிரமமான நிலைக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான, தண்டராம்பட்டு, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், ஆரணி, சேத்துப்பட்டு ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை மீட்பு குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் ராஜ்மைக்கேல் தலைமையில் பேலவேந்தரன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் திரளானோர் மாவட்ட ஆட்சியரிடம் பெருந்திரள் மனுவை வழங்கினார்.
அரசு உதவி பெறும் மாணவர்களின் நலனை கருதி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 7.5 சதவிகித உயர் கல்வி இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு நிதியுதவி பெறும் மாணவர்களுக்கும் முழுமையாக விரிவுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வலியுறுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் கனமழை காரணமாக மகாலிங்கம் என்பவரின் மனைவி பெருமாதாய் கணவனை இழந்து தனியாக வசித்து வந்த நிலையில், அவர் வசித்து வந்த கூரை வீடு திடீரென இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..