கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட இளைஞர்கள்.. விசாரணையில் வெளிவந்த முக்கிய தகவல்.!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரேம்குமாா் உள்ளிட்ட காவலா்கள் திட்டுமலை காளி கோயில் பகுதியில் வழக்கம் போல் ரொந்து பணியிலும் வாகன தணிகையிலும் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த மூன்று பேர் போலீசாரை கண்டதும் தனது இரு சக்கர வாகனத்தில் வேகமாக தப்பிச் சென்றனா்.
அதனை கண்டு சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பின்தொடர்ந்த போது அந்த பகுதியில் மாற்றுப் பாதை இல்லாததால் வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடினா். பதிவு எண் இல்லா இருசக்கர வாகனத்தை போலீசார் கைப்பற்றி அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில் பாதாரக்குடி அய்யனார் கோவில் செல்லும் மண்சாலையில் உள்ள சிறிய பாலத்தின் அருகில் பதிக்க வைத்திருந்த 2 கிலோ எடை உள்ள 64 பண்டல்களை காவல்துறை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட மொத்த கஞ்சாவின் எடை சுமார் 124 கிலோ இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த துர்கா ராவ், சண்டிபாபு, ரம் அபிலேஷ் வர்மா, சுபாஷ், வித்யாசாகர் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் இவா்கள் சென்னையைச் சோ்ந்த முக்கிய கஞ்சா கடத்தல் மன்னனிடமிருந்து கஞ்சாவை பெற்று ஒப்படைப்படைப்பதும் இதற்காக இவா்களுக்கு நபா் ஒருவருக்கு தலாரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டதாகவும் இதற்காகத் தான் இந்தத் தொழிலில் ஈடுபட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா். மேலும் விஜயவாடாவிலிருந்து காரைக்குடி வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து 3 கார்கள், நான்கு இருசக்கர வாகனங்கள், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-பவானி கார்த்திக்