இளைஞர் விக்னேஷ் உயிர் இழப்பு…!! உயிர் இழப்பிற்கு காரணம்…!! கிண்டி மருத்துவர்கள் விளக்கம்..!!
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த இளைஞர் விக்னேஷ் உயிர் இழப்பிற்கு உரிய நேரத்தில் அவரை அழைத்து வராததே காரணம் என மருத்துவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் இன்று விக்னேஷ் ( பெரும்பாக்கம் ) தீராத வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார்., ஆனால் அங்கு அதிக பணம் செலவான காரணத்தால் அங்கிருந்து கிண்டி அரசு மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை பார்த்து வந்த நிலையில் இன்று காலை பரிதபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் உறவினர்கள் மருத்துவமனையின் வளாகத்தில், மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும், அவர்களின் கவனக்குறைவே உயிர் இழப்பிற்கு காரணம் என கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டதில் ஈடுப்பட்டனர்., குறிப்பாக அவசர சிகிச்சைப்பிரிவில் மருத்துவர்களே இல்லை என்றும் உறவினர்கள் குற்றச் சாட்டு அளித்துள்ளனர்..
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் “இளைஞர் விக்னேஷ் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வரப் பட்ட போதே அவர் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது., இருப்பினும் அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது., ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..