தெலங்கானா மாநிலத்தில் போலீசாரை தாக்கியதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு
தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா தெலங்கானா பணியாளர்கள் தேர்வாணையத்தின் வினாதாள் வெளியான விவகாரத்தில் சரியாக விசாரனை நடைபெறவில்லை என வழக்கை சரியான பாதையில் விசாரிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு அலுவலகத்திற்கு செல்ல தனது இல்லத்தில் இருந்து நேற்று காலை காரில் புறப்பட்டார்.
இதற்கு போலீசார் அனுமதிக்காமல் அவரது வீட்டின் முன்பு தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் ஷர்மிளாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எஸ்.ஐ. மற்றும் கான்ஸ்டபிள் மீது ஷர்மிளா தாக்கினார். மேலும் ஷர்மிளா காரை முன்னோக்கி இயக்கியதில் காவலர் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனால் போலீசார் ஷர்மிளா மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதற்கு ஒய்.எஸ்.ஷர்மிளா நான் குற்றவாளியா? கொலைகாரனா? என போலீசார் மீது வாக்குவாதம் செய்தார். தனது தற்காப்பிற்காக போலீசாரை தள்ளி விட்டதாகவும் தன்னை தற்காத்துக் கொள்வது எனது உரிமை. தேர்வாணையம் பேப்பர் லீக் ஆன விவகாரத்தில் தரணாவே,போராட்டமோ செய்யவில்லை சிறப்பு புலனாய்வு அமைப்பினரிடம் புகார் அளிக்க இருந்தேன் ஆனால் போலீசார் தன்னை தடுத்து நிறுத்தி தவறாக நடந்து கொண்டனர் என்றார்.
இந்நிலையில் போலீசார் மீது தாக்கியதாக ஒய்.எஸ்.ஷர்மியை பெண் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஷர்மிளா மீது ஐபிசி 332,353,509,427 பிரிவுகளின் கீழ் ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
ஒய்.எஸ்.சர்மிளாவுக்காக அவரது தாயார் ஒய்.எஸ்.விஜயம்மா காவல் நிலையம் சென்ற நிலையில் அவரை போலீசார் காரை விட்டு இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட ஷர்மிளாவை நாம்ப்பள்ளி மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர்.
போலீசார் மற்றும் ஷர்மிளா தரப்பு வழக்கறிஞர்கள் கூறிய வாதங்களைக் கேட்ட நீதிபதி 14 நாட்கள் ரிமாண்டுக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து ஷர்மிளாவை போலீசார் சென்சில கூட சிறையில் அடைத்தனர். ஷர்மிளாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் கேட்டபோது போலீசார் தரப்பு வழக்கறிஞர் இல்லாததால் இன்றைக்கு ஜாமின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.