‘மாஸ்டரில் இணைந்த யுவன் மற்றும் சந்தோஷ் நாராயணன்’ மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து குட்டி ஸ்டோரி, வாத்தி Coming மற்றும் வாத்தி Raid ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது இதனை சன் டிவி தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இப்படத்தின் பாடல்கள் அடங்கிய TrackList வெளியாகியுள்ளது.

அதில் ‘அந்த கண்ண பாத்தாக்கா’ என்ற பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இதனை முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். மேலும் விக்னேஷ் சிவன் Quit பண்ணுடா என்ற பாடலையும் எழுதியுள்ளார். மேலும் ‘பொலக்கட்டும் பரபர’ எனும் பாடலை மற்றுமொரு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.

மாஸ்டர் படத்தில் பிரபல இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் பாடல்கள் பாடியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

சென்னையில் கொரோனா விழிப்புணர்விற்க்காக இலவசமாக வழங்கப்பட்ட 500 கிலோ சிக்கன் பக்கோடா!

‘திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்?’ 29ம் தேதி பொதுக்குழு கூட்டம்!