‘இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்துள்ளாரா யுவன்’ மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடிகர் விஜய்யுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து பணியாற்றியுள்ளார்.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து குட்டி ஸ்டோரி, வாத்தி Coming மற்றும் வாத்தி Raid ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது இதனை சன் டிவி தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இப்படத்தின் பாடல்கள் அடங்கிய TrackList வெளியாகியுள்ளது.அதில் ‘அந்த கண்ண பாத்தாக்கா’ என்ற பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இதனை முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.

இதன் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் படத்தில் பணியாற்றியுள்ளார் யுவன் சங்கர்.
கடந்த 2003 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார். அதன்பிறகு இருவரும் எந்த படத்திலும் இணையவில்லை. இந்நிலையில் தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் யுவன் சங்கர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

‘விலையை குறைக்க சொன்னா உயர்த்தியுள்ளார்’ மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு!

‘கொரோனா அச்சம்’ இனி AC வகுப்பு பயணிகளுக்கு கம்பளிகள் கிடையாது!