‘கோலியை தூக்கிட்டு இவரை இந்திய அணிக்கு கேப்டனாக்குங்கள்’ யுவராஜ்சிங் அதிரடி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட்கோலியை தூக்கிவிடலாம் என்று யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது உலகின் மிகவும் சக்திவாய்ந்த அணியாக திகழ்கிறது. தற்போதைய இந்திய அணியை வீழ்த்துவது என்பது மற்ற அணிகளுக்கு கனவாக உள்ளது. கோலி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினாலும் ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணி இறுதிப்போட்டி அல்லது அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து கோப்பையை வெல்ல முடியாமல் திரும்புகிறது.

இதனால் விராட்கோலியின் கேப்டன்சி மீதும் கேள்வி எழுகின்றது. இந்நிலையில் விராட்கோலியை இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ரோஹித்தை கேப்டனாக்கலாம் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ” கடந்த காலங்களில் 2 வகையான போட்டிகள் மட்டுமே இருந்தது. இதனால் கேப்டன்களுக்கு எளிதாக இருந்தது. ஆனால் தற்போது மூன்று வகையான போட்டிகள் உள்ளன இது அவர்களுக்கு அதிகமான வேலைப்பளுவை கொடுக்கும்.

குறிப்பாக டி20 போட்டிகளில் ரோகித் சர்மாவை கேப்டானக்குவதன் மூலம் விராட் கோலியின் வேலைப்பளுவும் குறையும் அதே நேரத்தில் அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பதால் இன்னும் பேட்டிங்கில் நிறைய சாதிக்க முடியும். மேலும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ரோகித் சர்மா மூன்று முறை கோப்பையை கைப்பற்றி உள்ளார். எனவே இதை கருத்தில் கொண்டு ரோஹித் ஷர்மாவுக்கு டி20 கேப்டன்ஷிப் பதவியை கொடுக்கலாம்” என்று யுவராஜ் சிங் ஆலோசனை கூறியுள்ளார்.

What do you think?

‘நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டது, பொள்ளாச்சி வழக்கில்?’ கேள்வி எழுப்பும் கார்த்தி!

‘இன்றும் உயர்ந்தது தங்கத்தின் விலை’ ஒரு சவரன் இவ்ளோவா?